பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் வண்ணமயமான வாணவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா 29 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 18ஆவது இடத்தை பிடித்தது.
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தம் 29 பதக்கங்களுடன் 18வது இடத்தைப் பிடித்தது. 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்று சாதனை படைத்தனர்.
கடைசிநாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பூஜா ஓஜாக்கான தடகள போட்டி மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், பெண்களுக்கான கயாக் ஒற்றை 200மீ KL1 ஸ்பிரிண்ட் கேனோயிங் இறுதிப்போட்டியில் பூஜா பதக்க வாய்ப்பை தவறவிட்டார். எனவே, பாரீஸ் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவால் 30வது பதக்கத்தை எட்ட முடியவில்லை அதைத்தொடர்ந்து விளையாட்டு திருவிழா நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 நிறைவு விழா பாரிஸில் உள்ள விளையாட்டுகள் புகழ்பெற்ற இசை நிறைந்த விழாவுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியா 29 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் ஹர்விந்தர் சிங் மற்றும் ப்ரீத்தி பால் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்தனர்.
கடந்த முறை டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா ஐந்து தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களுடன் 24வது இடத்தில் இருந்தது. இம்முறை 6 இடங்கள் முன்னேறி 18 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024ல் இந்தியாவின் பதக்கம் வென்றவர்களின் பட்டியல்:
- பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் அவனி லெகாரா – தங்கம்
- மோனா அகர்வால் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் SH1 (துப்பாக்கி சுடுதல்) – வெண்கலம்
- பெண்களுக்கான 100மீ டி35 (தடகளம்) பிரிவில் ப்ரீத்தி பால் – வெண்கலம்
- ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்) போட்டியில் மணீஷ் நர்வால் – வெள்ளி
- பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் ரூபினா பிரான்சிஸ் – வெண்கலம்
- பெண்களுக்கான 200மீ டி35 (தடகளம்) பிரிவில் ப்ரீத்தி பால் – வெண்கலம்
- ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 (தடகளம்) போட்டியில் நிஷாத் குமார் – வெள்ளி
- ஆண்களுக்கான வட்டு எறிதல் F56 (தடகளம்) போட்டியில் யோகேஷ் கதுனியா – வெள்ளி
- ஆண்களுக்கான SL3 (பேட்மிண்டன்) ஒற்றையர் பிரிவில் நிதேஷ் குமார் – தங்கம்
- பெண்கள் ஒற்றையர் SU5 (பேட்மிண்டன்) பிரிவில் துளசிமதி முருகேசன் – வெள்ளி
- பெண்கள் ஒற்றையர் SU5 (பேட்மிண்டன்) போட்டியில் மனிஷா ராமதாஸ் – வெண்கலம்
- சுஹாஸ் யாதிராஜ் ஆண்கள் ஒற்றையர் SL4 (பேட்மிண்டன்) – வெள்ளி
- ராகேஷ் குமார் / ஷீத்தல் தேவி கலப்பு அணி (வில்வித்தை) – வெண்கலம்
- ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமித் ஆன்டில் F64 (தடகளம்) – தங்கம்
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் நித்யா ஸ்ரீ சிவன் SH6 (பேட்மிண்டன்) – வெண்கலம்
- பெண்களுக்கான 400 மீட்டர் டி20 (தடகளம்) போட்டியில் தீப்தி ஜீவன்ஜி – வெண்கலம்
- ஆண்களுக்கான ஈட்டி எப்46 (தடகளத்தில்) சுந்தர் சிங் குர்ஜார் – வெண்கலம்
- ஆண்களுக்கான ஈட்டி எப்46 (தடகளம்) போட்டியில் அஜீத் சிங் – வெள்ளி
- ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 (தடகளம்) போட்டியில் மாரியப்பன் தங்கவேலு – வெண்கலம்.
- ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 (தடகளம்) பிரிவில் ஷரத் குமார் – வெள்ளி
- சச்சின் கிலாரி ஆண்கள் ஷாட் புட் F46 (தடகளம்) – வெள்ளி
- ஆண்கள் தனிநபர் ரீகர்வ் (வில்வித்தை) பிரிவில் ஹர்விந்தர் சிங் – தங்கம்
- ஆண்கள் கிளப்பில் தரம்பிர் 51 (தடகளம்) – தங்கம்
- ஆண்கள் கிளப்பில் பிரணவ் சூர்மா 51 (தடகளம்) – வெள்ளி
- ஜூடோ ஆண்கள் பிரிவில் கபில் பர்மர் – 60 கிலோ (ஜூடோ) – வெண்கலம்
- பிரவீன் குமார் டி64 உயரம் தாண்டுதல் (தடகளம்) – தங்கம்
- ஆண்கள் ஷாட் புட்டில் எஃப்57 (தடகளம்) ஹோகாடோ செமா – வெண்கலம்
- பெண்களுக்கான 200 மீட்டர் டி12 (தடகளம்) போட்டியில் சிம்ரன் சிங் – வெண்கலம்
- ஆண்களுக்கான ஈட்டி எப்41 (தடகளம்) போட்டியில் நவ்தீப் சிங் – தங்கம்