பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாளை (ஜுலை 26) ஒலிம்பிக் திருவிழா தொடங்க உள்ளதார், பாரிஸ் நகரம் உள்பட நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாரிஸ் நகரம் வண்ணக்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலி ஜொலிப்புடன் காணப்படுகிறது. நாட்டு மக்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் பாரிஸ் நகரம் வந்துகொண்டிருப்பதால் நகரமே விழாக்கோலமாக . காணப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக இந்தியா விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி. . நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த விளையாட்டு திருவிழா இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில், 206 நாடுகளின் சார்பில் மொத்தம் 2 ஆயிரத்து 900 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே பாரிஸ் நகரம் வந்துடைள்ளனர். மேலும் உலகெங்கும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களும் பாரிஸ் நகரம் வந்த வண்ணம் உள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி காரணமாக, அந்நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாரிஸ் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வெவ்வேறு கலை நிகழ்ச்சிகளில் களைகட்டி உள்ளது. 2024ம் ஆண்டு பிறந்தது முதலே பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் கொண்டாட்டம் நடைபெற்ற வருகிறது.
இந்த போட்டிக்காக பிரத்யேக ஒலிம்பிக் கிராமத்தை பிரான்ஸ் நாடு உருவாக்கி உள்ளது. இந்த விளையாட்டு கிராமத்தில்தான், ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள உலகெங்கும் இருந்து வருகை தந்துள்ள விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த கோகாலத்துக்கு மத்தியில் நாளை ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. . மேலும், இந்த முறை ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா மைதானத்தில் நடைபெறப்போவதில்லை. அதற்கு மாற்றாக பாரிஸின் மையப்பகுதியைக் கடக்கும் சீன் நதியின் மேற்பரப்பில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குறைந்த கார்பன் கான்கிரீட், மர கட்டமைப்புகள் போன்றவற்றை கொண்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் ஒலிம்பிற்கான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இந்த தொடக்க விழாவில் உலக பிரபலங்கள் பங்கேற்று விழாவை சிறப்பாக தொடங்கி வைக்க உள்ளனர். உலகின் பல நாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்க இருப்பதாலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் இதை பார்ப்பதற்காக வர உள்ளதாலும் பாரீஸ் நகரம் முழுவதும் பல மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை ஒலிம்பிக் தொடங்க உள்ளதால் பாரீஸ் நகரமே களைகட்டி காணப்படுகிறது.
நீச்சல், ஓட்டப்பந்தயம், கூடைப்பந்து, பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், மராத்தான், குதிரையேற்றம், ஹாக்கி, கோல்ஃப், ஜிம்னாஸ்டிக், படகுப்போட்டி, பாய்மரப்படகுப் போட்டி, வாலிபால், பளுதூக்குதல், டேக்வோண்டோ, துப்பாக்கிச்சுடுதல், ரக்பி, நீளம் தாண்டுதல், தடை ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என பல போட்டிகள் நடைபெற உள்ளது.
நடப்பு ஒலிம்பிக் தொடரில் ப்ரேக்கிங் டான்ஸ் முதன்முறையாக போட்டிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் ஆப்ரிக்காவில் இருந்து 54 நாடுகளும், ஐரோப்பாவில் இருந்து 48 நாடுகளும், அமெரிக்க கண்டத்தில் இருந்து 41 நாடுகளும், ஆசியாவில் இருந்து 44 நாடுகளும் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக இந்தியா விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஒலிம்பிக் தொடரில் பதக்கப்பட்டியலில் எப்போதும் முதலிடத்தை பிடிப்பதில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே கடும் போட்டி நடைபெறும். இந்த முறையும் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கு அமெரிக்கா, சீனா இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் மொத்தம் 116 வீரர்கள், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.
ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் 117 இந்திய வீரர்கள் பங்கேற்பு…