டெல்லி: பாரிஸில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ள இந்தியா விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 வரும் ஜுலை 26ம் தேதி கோலாகலமாக  பாரில் நகரில் தொடங்க உள்ளது.  இந்த போட்டிகள் ஆகஸ்டு 11ந்தேதியுடன் முடிவடைகறிது. இந்த போட்டிகளில்  இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளன. இதற்காக பாரிஸ் நகரம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 117 இந்திய விளையாட்டு வீரர்கள் (ஏழு இருப்புக்கள் உட்பட) பிரெஞ்சு தலைநகருக்குச் செல்வார்கள் என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்து ள்ளது. அதனப்டி,  தடகளப் போட்டிகளில் இருந்து 29 உறுப்பினர்கள் (11 பெண்கள் மற்றும் 18 ஆண்கள்) இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளது.  துப்பாக்கி சுடுதல் போட்டியில் 21 பேரும்,  மற்றும் ஹாக்கியில் 19  பேரும், அதிகப்பட்சமாக தடகள போட்டிகளில் 29 வீரர்களும், துப்பாக்கி சுடுதலில் 21 பேரும் பங்கேற்க உள்ளனர்.

டேபிள் டென்னிஸை எட்டு வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு உள்ளனர்.  அதே நேரத்தில் பேட்மிண்டனில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி வி சிந்து உட்பட ஏழு போட்டியாளர்கள் இடம்பெறுவார்கள். மல்யுத்தம் (6), வில்வித்தை (6), மற்றும் குத்துச்சண்டை (6) ஆகியவற்றில் தலா ஆறு பிரதிநிதிகள் இருப்பார்கள், அதைத் தொடர்ந்து கோல்ஃப் (4), டென்னிஸ் (3), நீச்சல் (2), படகோட்டம் (2), மற்றும் குதிரையேற்றம், ஜூடோ ஆகியவற்றிற்கு தலா ஒருவர் , படகோட்டுதல் மற்றும் பளு தூக்குதல் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக பிரதமர் மோடி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ள்ள இந்திய வீரர்கள் குழுவுடன் தனிப்பட்ட மற்றும் மெய்நிகர் தொடர்புகளை நடத்தினார், மேலும் 2024 ஒலிம்பிக்கி லிருந்து அவர்களின் அனுபவத்திலிருந்து உள்ளீடுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்கள் நாட்டிற்கு பெரும் நன்மையை செய்வார்கள் என்று குறிப்பிட்டார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்

பாரிஸ் ஒலிம்பிக்கில் முற்றிலும் புதிய விளையாட்டு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.  அது பிரேக் டான்ஸ் ஆகும். ஒலிம்பிக்கில் இதற்கு முன் வேறு எந்த நடன விளையாட்டும் சேர்க்கப்பட்டதில்லை

இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  தனி  நகரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை ஒலிம்பிக்  போட்டி தொடக்க விழா மைதானத்தில் நடைபெறப்போவதில்லை. அதற்கு மாற்றாக பாரிஸின் மையப்பகுதியைக் கடக்கும் சீன் நதியின் மேற்பரப்பில்  பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குறைந்த கார்பன் கான்கிரீட், மர கட்டமைப்புகள் போன்றவற்றை கொண்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் ஒலிம்பிக்கிறகான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

முதன்முறையாக, நடப்பாண்டு நடைபெற்றும் ஒலிம்பிக் 2024 விளையாட்டுப் போட்டிகள் பிரெஞ்சு பிரதேசமான டஹிடியிலும் நடைபெற உள்ளது.

பாரிஸிலிருந்து 15 ஆயிரம் கிமீ தொலைவில் அமைந்துள்ள பசிபிக் தீவின் புகழ்பெற்ற டீஹூபூ அலையில் சர்ஃபிங் போட்டி நடைபெற உள்ளது.

பாரிஸ் 2024 இல் வழங்கப்படும் நீர் சார்ந்த போட்டிகளில் தான் அதிக பதக்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி,  நீச்சல், மாரத்தான் நீச்சல், டைவிங், வாட்டர் போலோ மற்றும் கலை நீச்சல் என 49 நிகழ்வுகள் நடைபெற உள்ளன.  தடகளம் இரண்டாவது இடத்தில் உள்ளது

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் சுமார் 10, 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுத் தொடரின் முடிவில் போட்டியாளர்களின் இறுதி எண்ணிக்கை உறுதி செய்யப்படும்.

ஒலிம்பிக் வீரர்களுக்காக  24 மணி நேரமும் திறக்கப்பட்டு 3 ஆயிரத்து 260 இருக்கைகளுடன், நாளொன்றிற்கு 40 ஆயிரம் உணவுகள் பரிமாறப்பட உள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களில், ஈபிள் டவரிலிருந்து எடுக்கப்பட்ட உலோகக் கலவைகள் இடம்பெற்றுள்ளன. பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளின் போது 32 விளையாட்டுகளும் மொத்தம் 329 பதக்க நிகழ்வுகள் நடைபெற உள்ளன

மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இரண்டாவது நகரம் என்ற பெருமையை பாரிஸ் பெற்றுள்ளது. முன்னதாக 1908, 1948 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இந்நிலையில், 1900, 1924 ஆண்டுகளை தொடர்ந்து, 2024-லும் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.