
த்ரிஷாவின் 60 வது படமான ‘பரமபத விளையாட்டு’ வருகிற பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அம்ரீஷ் இசையமைத்துள்ளார்..
நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
பொலிடிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அம்மா பொண்ணுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. அன்று பங்கேற்ற சுரேஷ் காமாட்சி உட்பட பலர் திரிஷாவை அவ்விழாவில் கலந்து கொள்ளாததற்கு விமர்சித்திருந்தார் .
அதன் பின் அப்படத்தை விளம்பரம் படுத்தும் விதமாக த்ரிஷா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் .
தற்போது, இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனத்துடன் பேசி இதற்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்ப் புத்தாண்டுக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]