பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும்  பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்  கிடைத்துள்ளது.

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியின் T64 பிரிவில்  பங்கேற்ற இந்திய வீரர் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. பிரவீன் குமார்  ஏற்கனகே கடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்றிருந்த நிலையில், தற்போது தங்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

பாரீஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் பிரவீன் 26வது பதக்கத்தை  வென்றார், வெள்ளிப் பதக்கத்தை அமெரிக்காவின் டெரெக் லோசிடென்ட் கைப்பற்றினார், வெண்கலப் பதக்கத்தை உஸ்பெகிஸ்தானின் கியாசோவ் டெமுர்பெக் மற்றும் போலந்தின் மசீஜ் லெபியாடோ ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

இது பாரிஸில் இந்தியா பெற்ற ஆறாவது தங்கப் பதக்கமாகும்.

T64 என்பது ஒரு கீழ் காலில் மிதமான இயக்கக் குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்காக அல்லது முழங்காலுக்குக் கீழே ஒன்று அல்லது இரண்டு கால்களை இழந்தவர்கள் ஆடும் ஆட்டம்.

தங்கம் வென்ற பிரவீன், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜெவார் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவ்ர், பிறவி குறைபாடு காரணமாக தனது இடுப்பை இடது காலுடன் இணைக்கும் எலும்புகளை பாதித்ததால் சவால்களை எதிர்கொண்ட போதும் தடகளப் பயணத்தைத் தொடங்கினார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி அவரை பாதையில் வைத்திருந்தது, மேலும் அவர் 2019 இல் உலக பாரா தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும் கவனத்தைப் பெற்றார்.