முழு உடற் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியில் 2024 ம் ஆண்டு தானும் பங்கேற்க இருப்பதாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் சுமித் அன்டில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய உலக சாதனை படைத்த சுமித் அன்டில், தன்னால் 75 முதல் 80 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறியமுடியும் என்று கூறினார்.
75 முதல் 80 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறியும் வீரர்கள் முழு உடற் தகுதியுடன் கூடிய விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்.
அந்த வகையில், தன்னால், 2024 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் ஆகிய இரு போட்டிகளிலுமே பங்கேற்க முடியும் என்று தன்னம்பிக்கையுடன் கூறியதோடு, அதற்கான பயிற்சியிலும் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.