சென்னை:

டந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில்,  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ஏப்ரல் 29ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவு மே 5ம் தேதியும் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி அம்மாத இறுதியில் ஒன்றன் பின் ஒன்றாக முடிந்தன. இதையடுத்து, மார்ச் 20ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. தற்போது பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இதற்கான முடிவு, ஏற்கனவே அறிவித்துள்ளபடி ஏப்ரல் 29ம் தேதி வெளியாக உள்ளது.

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள்  திருத்தும் பணியும் முடிவடைந்துவிட்டதால், தற்போது மதிப் பெண்களை இணையதளத்தில்  பதிவேற்றும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிகள் ஒருவாரத்திற்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து,  பிளஸ் 1 தேர்வு முடிவு மே 5ம் தேதி வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

தேர்வு முடிவுகள் அனைத்தும் பள்ளிகளின் இணைய தளத்தில் காலை 9.30 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் அங்கேயே தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு வெளியான அடுத்த இரண்டு நிமிடத்தில் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். இது தவிர தேர்வுத்துறையின் இணைய தளத்திலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.