நேற்றிரவு IPL 31-வது ஆட்டத்தில் குஜராத் லயன்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி குஜராத்தை முதலில் பேட் செய்ய பணித்தார்.
குஜராத்தின் இந்த IPL போட்டிகள் வெற்றிபெற முக்கிய பலமே அதன் அதிரடி ஆட்டகாரர்கள் பின்ச், சுமித்தும் மற்றும் மெக்கல்லமும். ஆனால் இந்த போட்டியில் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். முன்னணி வீரர்கள் ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய கார்திக் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜடேஜா(36) அதிரடியாக ஆடியதால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் எடுத்தது.
150 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி தொடக்க ஆட்டக்காரர்கள் 18 வயதான ரிஷாப் பான்ட் மற்றும் தென் ஆப்பிரிக்கா அதிரடி வீரர் டி காக் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட டெல்லி அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை பெற்றது. அட்டநாயகன் ரிஷாப் பான்ட 69 ரன்கள் மற்றும் குயின்டான் டி காக் 46 ரன்களும் வெற்றி பெறுவதற்கு அடித்தளமிட்டனர்.