சென்னை,
கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை விழாவில் வைத்து அறைந்த வசந்தமணி இன்று திடீர் மரணம் அடைந்தார்.
திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வம். கடந்த 21-ம் தேதி பேளூருரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைத்து, வசந்தா மணி என்கிற மணிகண்டன், பன்னீர்செல்வத்தின் காலில் விழுவதை போல சென்று எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்தார்.
இதையடுத்து எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும், வசந்தமணியை அடித்து உதைத்து, போளூர் காவல்துறையின ரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வசந்தமணி மீது , எம்எல்ஏவை தாக்கியதாக வழக்கு பதியப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார். அதுபோல, வசந்தா மணியும், எம்எல்ஏ தன்னை பதிலுக்கு தாக்கியதாக வசந்தாமணி தரப்பும் புகார் கொடுத்திருந்தது.
ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட, 4 நாட்களில் திடீரென வசந்தமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையின்போது, அவர்மீது கட்சிக்காரர்கள் தாக்கியதன் காரணமாக அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து, கடந்த 24-ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வசந்தமணி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்