கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பன்னீர்செல்வம்.
கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்த கருப்பன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்நிலையில் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு ஐஸ்வர்யா முருகன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கணேஷ் ராகவேந்திரா என்பவர் இசையமைக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனா ஒளிப்பதிவும், ஜான் ஆபிரகாம் என்பவரின் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர்
ஜி.ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் இந்த படத்தை தயாரிக்கின்றனர். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை வெளியிடுகிறது.