டெல்லி: நாடாளுமன்றத்தில் தொடர் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்களவை மார்ச் 22ந்தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 1 மாத காலம் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 8ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 5 மாநில சட்டமன்ற தேர்ததலையொட்டி, சபையை முன்கூட்டியே முடிக்க தமிழகம் உள்பட சில கட்சி உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், பாராளுமன்ற இரு அவைகளிலும் விவசாயிகளின் பிரச்சினை, பெட்ரோல், டீசல், எரிவாய்வு  விலை உயர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று வெள்ளிக்கிழமை மக்களவை நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் 22 வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.