டில்லி :

னாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், இந்தியாவை சேர்ந்த 475 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய அரசின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்தியர்கள் குறித்த தகவலை வெளியிட்ட  பனாமா பேப்பர்சில்,  இந்திய நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 475 முக்கியஸ்தர்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியானது.

அதில், வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால், முன்னாள் பாரோன் குழுவின் கபீர் முல்சந்தனானி மற்றும் பேஷன் டி.வி இந்திய விளம்பரதாரரான அமன் குப்தா,

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், டிஎல்எப் குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், அப்போலோ டயர்ஸ், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி,‘ மேற்குவங்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஷிஷிர் பஜோரியா, டில்லி லோக்சட்டா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெறப்பட்டதாக கூறப்பட்டது.  இந்னாநிலையில்  அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரிடம் மீண்டும்  விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் பனாமா பேப்பர்ஸ் தகவல்களை வைத்து, பாகிஸ்தான் பிரதமர் மீது தொடரப்பட்ட வழக்கில் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.