ராமேஸ்வரம்

ரு முறை ஒத்தி வைக்கப்பட பாமபன் பாலம் திறப்புவிழா இன்னும் இருவாரத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

அணமையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட  ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

இப்புதிய ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. திறப்பு விழா தொடர்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.

நேற்று பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று வந்தனர். அந்த ஆய்வுக்குப் பின்னர் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் செய்தியாளர்களை சந்தித்தார்

அவர் செய்தியாளர்களிடம்,

“பாம்பன் புதிய ரயில் பாலத்தை இன்னும் 2 வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற உள்ளார். பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட பின்னர்தான் ராமேசுவரம் ரயில் நிலைய பணிகள் முடிவடையும்”

எனத் தெரிவித்துள்ளார்.