டெல்லி

னைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் ,தெரிவித்தனர்.

நேற்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி கூட்டுக்குழு அமைக்கப்படும் என மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்து இருந்தார். இன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 31 பேர் கொண்ட கூட்டுக் குழு பாஜகவின் ஜெகதாம்பிகா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 31 பேரில் மக்களவை உறுப்பினர்கள் 21 பேர் மேலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.  குறிப்பக இந்த குழுவில் ஆ.ராசா, ஒவைசி, இம்ரான் மசூத், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் இக்குழு, மசோதா குறித்து ஆய்வு செய்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.