மீரட்

ந்திய;ப் பெண் பாகிஸ்தானியரை மணந்தும் அவரை நாட்டுக்க்ள் நுழைய பாக் அரசு அனுமதி மறுத்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட உத்தரபிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியைச் சேர்ந்த சனா., தனது இரண்டு குழந்தைகளுடன் 45 நாள் விசாவில் இந்தியா வந்திருந்தார். அவரது விசா காலாவதியாகிவிட்டதால் அவரை இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

எனவே அவர்கள் கடந்த 24-ந் தேதி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றபோது எல்லையில் இருந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

அதிகாரிகள்ம்அவர்களிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்ததால் பாகிஸ்தானுக்கு திரும்ப அனுமதி மறுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆயினும், அவரது குழந்தைகள் பாகிஸ்தான் குடிமக்கள் என்பதால் எல்லையைக் கடக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் சனா தனது குழந்தைகளை தனியாக அனுப்பமறுத்துவிட்டார்