பழனி:

ஞ்சலகம் வாயிலாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பஞ்சாமிர்தத்தை பக்தர்களின் வீடுகளுக்கே அனுப்பும் நடைமுறைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் பஞ்சாமிர்தம் மற்றும் தண்டாயுதபாணி சுவாமியின் ராஜ அலங்கார புகைப்படம் மற்றும் விபூதி பிரசாதம் ஆகியவற்றை தபால் மூலம் பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பழனி கோயில் நிர்வாகம் விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையை கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தபால் மூலம் அரை கிலோ டின் பழனி பஞ்சாமிர்தம், தண்டாயுதபாணி சுவாமியின் ராஜ அலங்கார லேமினேட்டட் புகைப்படம் மற்றும் இயற்கையாக கோவில் சார்பில் தயாரிக்கப்படும் 10 கிராம் விபூதி ஆகியவை ரூ.250 கட்டணத்தில் பக்தர்களின் வீடுகளுக்கே செல்லும் நடைமுறைக்கு வர அரசு ஆணை பிறப்பித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கவில் தபால் மூலம் அனுப்பப்படும் பிராசத கட்டணத்திற்கு ரூ.70-ம், தபால் செலவு ரூ.180 அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.