சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயிலில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 27ந்தேதி  கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறங்காவலர் குழு தகவல் வெளியிட்டு உள்ளது.

12ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், பழனி கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக கும்பாபிஷேசம் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் பக்தர்கள் தண்டாயுதபாணி கோயிலில்  கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர் பாபு சில மாதங்களுக்கு முன்பு,   நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று சீராய்வு கூட்டம் நடத்தினார். அப்போது, 2023 ஜனவரியில் பழநி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் கூறினார்.

இந்த நிலையில் அற்போது  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள உலக  பிரசித்தி  முருகன் கோவில்  2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெறும் எனவும் அறங்காவலர் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.