கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிக்கு வெண்ணிற பந்தும் பயன்படுத்தப்படுவதும். டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிறப்பந்துகளும் பயன்படுத்தப்படுவது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். டெஸ்ட் போட்டிகளில் இப்போது அதிகமாக இளஞ்சிவப்பு நிறப் பந்துகளும் பயன்படுத்தப் படுவதுண்டு. அந்த பந்துகள் எப்படி எங்கு தயாரிக்கப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியுமா?

pinkball

இளஞ்சிவப்பு கிரிக்கெட் பந்துகள் உருவாகும் இடம் பாகிஸ்தானின் சியல்கோட் என்ற இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் 15,000 ,உதல் 20,000 வரை இளஞ்சிவப்பு பந்துகள் உருவாக்கப்படுவதாக இதை தயாரிக்கும் காவர் அன்வர் கவாஜா கூறுகிறார். இவர்து க்ரேய்ஸ் ஆஃப் கேம்ப்ரிட்ஜ் நிறுவனம் 1953 ஆம் ஆண்டுமுதல் கிரிக்கெட் பந்துகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பெருமையுடன் கூறுகிறார். மேலும் பந்துகளை இங்குள்ள தொழிலாளர்கள் கைகளில் தைப்பதே தங்கள் நிறுவனத்தின் தனிச்சிறப்பு என்றும் அவர் தெரிவிக்கிறார்.
கடந்த ஆண்டு மற்றும் அனைத்து வண்ணங்களிலும் சுமார் 120,000 கிரிக்கெட் பந்துகள் தயாரித்ததாகவும் அது இவ்வாண்டில் 150,000 ஆக உயரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் வெள்ளை அல்லது க்ரீம் நிறத்தில் வீரர்கள் உடையணிவதால் அவர்களுக்கு நிறத்தால் குழப்பம் ஏற்படாத வகையில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறப்பந்துகளையும், ஒருநாள் மட்டும் 20/20 போட்டிகளில் வண்ண உடைகளை பயன்படுத்துவதால் வெண்ணிற பந்துகளையும் பயன்படுத்துகிறார்கள்.
20/20 போட்டியின் வரவுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளின் மவுசு முற்றிலும் குறைந்து விட்டது. 3 மணி நேரத்தில் உச்சக்கட்ட பரபரப்புடன் நடந்து முடியும் 20/20 போட்டிகளுடன் ஒப்பிடும்போது 5 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் இப்போது சுவாரசியமற்றதாக மாறிவிட்டது. பல நேரங்களில் அப்போட்டிகள் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவதும் உண்டு. எனவே இனி இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு பந்துகளின் தயாரிப்பு குறையும் அபாயம் இருக்கிறது.
கிரிக்கெட் பந்துகள்142 கிராம் முதல் 163 கிராம் வரை எடையுள்ளது. இவை $4 முதல் $25 வரைக்கும் விற்பக்கப்படுகிறது.