டெல்லி: இந்தியாவில் உள்ள ”பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்” இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்து உள்ளார்.

‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரனில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது, அதன் புல்வெளிக்காகவும், கால்நடையாகவும் அல்லது குதிரைவாலி வழியாகவும் மட்டுமே செல்ல முடியும், அங்கு செவ்வாய்க்கிழமை (22-4-25) காலை சுற்றுலாப் பயணிகள் குழு சென்றிருந்தது. தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலை நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்ததுடன், இதற்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த சுற்றுலாத்தலமானது ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் உள்ளது. இங்கு இந்திய ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொன்று குவித்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், ஒவ்வொருவரையும் நீங்கள் எந்த மதம் என விசாரித்து இந்துக்களை மட்டும் சுட்டுக்கொன்றது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தி உள்ளதுடன் மாநிலம் முழுவதும் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இதையடுத்து இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஆலோசிக்க ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இன்று அனைத்து கட்சி கூட்டதிற்கு அழைப்பு விடுத்துள்ளார். பின்னர் கேபினட் அமைச்சர்களின் சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்த தாக்குதலுக்கு தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அமைப்பு என்பதால், இந்திய அரசு பாகிஸ்தான் நாட்டுனான உறவை துண்டித்துள்ளது. வாகா எல்லை உள்பட அனைத்து எல்லைகளையும் மூடி, பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.
தொடர்ந்து, பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மத்திய கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். அப்போது அவர் பேசியதாவது,
“SVES விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதி இல்லை.
கடந்த காலங்களில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன.
SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது.
பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும்”
இவ்வாறு கூறியுள்ளார்.