இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் நீதிபதி நசிரூல் முல்க் பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நேற்று பதவி ஏற்றார். இவரது பதவி காலம் 2 மாதம் மட்டுமே.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் பாதுகாவலனாக அறியப்பட்ட முன்னாள் நீதிபதி முல்க், இடைக்கால பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு முடிந்து புதிய அரசு பதவி ஏற்கும் வரை குறைந்தது 60 நாட்கள் இடைக்கால பிரதமராக இருப்பார்.
நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ஜனாதிபதி மம்னூன் உசேன் நசிரூல் முல்க்குக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் பிரதமர் அப்பாசி, படை தளபதிகள், செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ச்ரானி மற்றும் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நசிரூல் முல்க் பாகிஸ்தானின் 7-வது இடைக்கால பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.