லாகூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு சர்ஃபராஸ் அகமது கேப்டனாக செயல்படுவார்.

மே மாதம் 31ம் தேதி நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் மற்றும் முக்கிய பேட்ஸ்மேன் ஆசிஃப் அலி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் அவர்கள் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், பலரும் எதிர்பார்த்தபடி, இளம்வயது வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஹஸ்னெய்ன் மற்றும் ஷஹீன் ஷா அஃப்ரிடி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, ஷோயப் மாலிக் மற்றும் முகமது ஹஃபீஸ் ஆகிய மூத்த வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணி விபரம்

சர்ஃபராஸ் அகமது (கேப்டன்)

அபித் அலி

பாபர் ஆஸம்

ஃபஹீம் அஷ்ரஃப்

ஃபக்கர் ஸமாம்

ஹாரிஸ் சோஹைல்

ஹசன் அலி

இமத் வாஸிம்

இமாம்-உல்-ஹக்

ஜுனைத் கான்

முகமது ஹஃபீஸ்

முகமது ஹஸ்னெய்ன்

ஷதாப் கான்

ஷஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் ஷோயப் மாலிக் ஆகியோர்தான் களம் காண்பவர்கள்.

 

– மதுரை மாயாண்டி