இஸ்லாமாபாத்
இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாட்டுக்கும் எதிராக பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறி உள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷ முகமது குரேஷி புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் ஈ முகமது இயக்க தலைவன் மசூத் அசார் பாகிஸ்தான் நாட்டில் இருப்பதை ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஒப்புக் கொண்டார். அது அப்போது பரப்ரப்பை உண்டாக்கியது. அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான பல செய்திகளில் அவர் பெயர் வந்த வண்ணம் உள்ளது.
நேற்று அவர் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், “இந்தியா பாகிஸ்தானிடம் புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆவணங்களை அளித்தது மகிழ்ச்சியான விஷயமாகும். பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளது. தற்போதைய பாகிஸ்தான் அரசு புதிய கண்ணோட்டத்தையும் அணுகுமுறையையும் கொண்டுள்ளதால் அரசின் கொள்கைகள் மிகவும் தெளிவுடன் உள்ளன.
எந்த ஒரு வெளிநாட்டுக்கும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பயங்கர வாத தாகுதல் நடத்த பாகிஸ்தானை களமாக பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மட்டோம். எங்களை பொறுத்த வரையில் புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்துக்கு பொறுப்பு உளதா என்பதில் குழப்பம் உள்ளது. அந்த இயக்கத்தின் தலைவர் தங்களுக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் தொட்ர்பு இலை என அறிவித்துள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.
தற்போது ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் முகமது அசார் மிகவும் உடல்நலக்குறைவுடன் உள்ளார். அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு நோய்வாய்ப் பட்டுள்ளார். அதே நேரத்தில் இந்தியா அவர் மீது ஆதாரத்துடன் குற்றச் சாட்டு அளித்தால் அவரை சட்டபூர்வ நடவடிக்கைக்குள் கொண்டு வர பாகிஸ்தான் தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.