டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 151/7 எடுத்த நிலையில்
பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவரில் 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியை படுதோல்வி அடையச் செய்தது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் அணியின் மொஹம்மத் ரிஸ்வான் 79 ரன்களும் பாபர் ஆஸம் 68 ரன்களும் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.