லாகூர்: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது வங்கதேச அணி. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே வென்றிருந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றியது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணியின் துவக்க வீரர் தமீம் இக்பால் மட்டுமே 53 பந்துகளில் 65 ரன்களை எடுத்தார். மற்றபடி, ஆ ஃபிப் ஹோசைன் எடுத்த 21 ரன்கள்தான் இரண்டாவது பெரிய ரன்.முடிவில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்தது அந்த அணி.

வெற்றிக்கு 137 என்ற சாதாரண இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியில், அஷன் அலி டக்அவுட்டாக, பாபர ஆஸமும், முகமது ஹபீஸும் அரைசதங்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தனர்.

பாகிஸ்தான் அணி, 16.4 ஓவர்களில், 1 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றிபெற்று, தொடரையும் வென்றது.

[youtube-feed feed=1]