இஸ்லமாபாத்:

ஜெய்ஸி-இ-முகமது தீவிரவாதி அமைப்பின் தலைவர் மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கக் கோரும் விவகாரத்தில், பாகிஸ்தானை யாரும் நிர்பந்திக்க முடியாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஸி-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஜார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதி என அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 3 முறை கொண்டு வந்தன.
அத்துனை முறையும் இதற்கு சீனா முட்டுக் கட்டை போட்டது.

இந்நிலையில், சீனா ஆதரவு தராவிட்டாலும் ஏப்ரல் 23&ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்படும் என 3 நாடுகளும் அறிவித்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல் பேசும்போது, தேச நலன் கருதி இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் எத்தகைய முடிவு எடுத்தாலும், அது யாராலும் நிர்பந்திக்கப்பட்டதாக இருக்காது என்றார்.

மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதி என அறிவிக்கக் கோரும் தீர்மானத்துக்கு, பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா முட்டுக் கட்டை போட்டு வரும் நேரத்தில், பாகிஸ்தான் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளது.