காஷ்மீர் மாநிலத்தின்  உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருபதுபேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராடி வரும் பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் உருவானது.

உரி தாக்குதல்
உரி தாக்குதல்

இதை உறுதிப்படுத்துவது போல, நேற்று  ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி  உள்ள வடக்கு  யணிகள் விமான சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது. பொதுவாக போர்க்காலங்களில் மட்டுமே இப்படி பயணிகள் விமான சேவை நிறுத்தப்படும். ஆகவே பாகிஸ்தானின் நடவடிக்கை சர்வதேச அளவில் கவனிக்க வைத்தது.  மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்தே விமான சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது என்று ஒரு தகவல் உலவியது. ஆனால் இதை இந்திய ராணுவம் மறுத்திருக்கிறது.
இதையடுத்து நாம் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் கணேசன் எஸ். அவர்களை தொடர்புகொண்டு சில கேள்விகளை எழுப்பினோம்.  உயர் ராணுவ அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றியவர். இந்திய மற்றும் உலக அரசியல் நிலவரங்களை கூர்ந்து கவனித்து வருபவர்.  2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம், உரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி கடைசியாக இந்தியா  பீரங்கி தாக்குதல் நடத்தியது. அத் தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் கணேசன் எஸ்.
லெப். கர்னல் கணேசன் எஸ் (பணியில்)
லெப். கர்னல் கணேசன் எஸ் (பணியில்)

 
இதோ..  patrikai.com  இதழுக்கு லெப். கர்னல் கணேசன் எஸ். அளித்த சிறப்புப் பேட்டி:
“தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. இரு நாட்டுக்கும் இடையே போர் மூளும் வாய்ப்பு இருக்கிறதா?”
”காஷ்மீரில் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியிருப்பது உண்மையே. ஆனால் போர் ஏற்படும் சூழல் இல்லை.
முன்பெல்லாம் ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதென்றால், பதினைந்து நாட்களுக்கு முன்பே ஆயத்தமாக வேண்டும். படை அணியினரை எல்லைக்கு நகர்த்த வேண்டும். இதை வைத்து போர் ஏற்படும் என்பதை அறிய முடியும்.
ஆனால் தற்போதைய நவீன வசதிகள் உள்ள காலத்தில் ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க இரு நாட்களே போதும். அதாவது 48 மணி நேரத்தில் போருக்கு ஆயத்தமாகிவிடலாம். இதை எளிதாக  பிறர் உணரவும் முடியும்.
தற்போது அப்படியான நடவடிக்கை ஏதும் இருப்பதாதாக தெரியவில்லை.
அப்படியானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷமீர் உள்ள, பாகிஸ்தான் வடக்கு பகுதிக்கு பயணிகள் விமான சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது ஏன்?  போர்க்காலங்களில்தானே இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும்?
பாகிஸ்தான் நடவடிக்கைக்குக் காரணம் வேறு. கடந்த 18ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் நமது ராணுவ வீரர்கள் இருபது பேர் பலியானார்கள்.
இனியும் பொறுப்பதில்லை என்பார்களே.. அந்த நிலைக்கு நமது ராணுவம் வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ஒரு தகவல் உலாவருகிறது.
கணேசன் எஸ்.
கணேசன் எஸ்.

அதாவது கடந்த இருபதாம் தேதி இரவு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகள் முகாம்கள் இரண்டை, ஹெலிகாப்டரில் சென்று, வீரர்கள் தரை இறங்கி தாக்குதல் நடத்தி திரும்பியதாகவும்,  இதில் இருபது பயங்கரவாதிகள் கொல்லப்படார்கள் எனறும் இருநூறு பேருக்கு மேல் காயம் என்றும் சொல்லப்படுகிறது.
மீண்டும் இந்திய ராணும் வான்வெளி தாக்குதல்களை நடத்துமோ என்ற பயத்தில், விமான சேவைகளை நிறுத்தி இருக்கலாம். அதாவது அந்த பகுதியில் எந்த விமானம் பறந்தாலும் சுடுவோம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.  ஆக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியிருக்கும் என்பது உறுதியாகிறது.
ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து இந்திய ராணுவம் தாக்கியது என்பதை இந்திய ராணுமே மறுத்திருக்கிறதே..!
ஆமாம்..!  ஆனால், தேவையற்ற முறையில் தனது பயணிகள் விமான சேவையை பாகிஸ்தான் நிறுத்த வேண்டியதில்லையே. ஆகவேதான் அந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என நான் நம்புகிறேன்.
இனி பாகிஸ்தான் நடவடிக்கை எப்படி இருக்கும்?
பாகிஸ்தான்  ராணுவ தலைமை தளபதி ரஹீல் என்பவர். அவர் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். தான் பதவி நீடிப்பு கேட்கப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இப்படி ஓய்வு பெறும் காலத்தில் ராணுவ தளபதிகள் ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பது வழக்கமான ஒன்று. அப்படி முயற்சிக்கும்போது,   அதற்கு முன்பாக இந்தியாவுடன் மோதல் போக்கை ஏற்படுத்த நினைப்பார்கள். இதைக் காரணம் கூறியே, தாங்கள் ஆட்சியைப் படித்தது சரி என்று நிறுவுவார்கள். இவர்கள் பொதுவாகவே அரசியல் தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள். ஆகவே இன்னும் சில காலத்துக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகமாக இருக்கலாம்.