ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் ஆளும் கட்சி மக்களவை உறுப்பினர் ரமேஷ் குமார் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து மசோதா தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலத்தை சேர்ந்த ரவீனா மற்றும் ரீனா ஆகிய இரு இந்து சிறுமிகளை ஹோலிப் பண்டிகை அன்று ஒரு கும்பல் கடத்தி சென்றுள்ளது.  அந்த சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்து இஸ்லாமிய மதகுரு இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.    இந்த திருமண வீடியோ வெளி வந்து சமூக வலை தளங்களில் வைரலாகியது.

இந்த இரு இந்து சிறுமிகளும் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி மனு செய்துள்ளனர்.   கட்டாய திருமணம் செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கட்டாய மத மாற்றம் உலகெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான் கான் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரமேஷ் குமார் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார்.   அவர் நேற்று முன் தினம் இரு மசோதாக்களை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.  குழந்தைகள் திருமண எதிர்ப்புச் சட்டம் 2019 மற்றும் சிறுபான்மையினர் உரிமையை காக்கும் சட்டம் 2019 என இந்த இரு மசோதாக்கள் தாக்கல் செய்யபட்டுள்ள்து.

இந்த மசோதாவில் குழந்தைகள் திருமணம் செய்வோருக்கும் நடத்தி வைப்போருக்கும் கடுமையன தண்டனைகள் வழங்க விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன.   அத்துடன் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றம் செய்வதும் தடை செய்யப்பட்டு இந்த குற்றத்துக்கும் கடுமையான தண்டனைகள் அளிக்க வழிமுறைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன.