கராச்சி:
பாகிஸ்தானில் பெய்ய மழை வெள்ளத்தில் 1,695 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 1,695 பேர் இறந்துள்ளதாகவும், 12,865 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 2- ஆம் தேதி கணக்கீட்டின்படி, 5 மாகாணங்களில் உள்ள 81 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 35 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமானதாகவும், சுமார் 10 லட்சம் கால்நடைகள் இறந்துபோனதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.