டெல்லி: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய அரசானது லோக்சபாவில் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: 2020ம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை 778 கி.மீ., தூரம் கொண்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 3,186 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
198 கி.மீ., தூரமுள்ள சர்வதேச எல்லைப்பகுதியிலும் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 242 முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 350 முதல் 400 முறை அத்து மீறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராணுவ ஆவணங்களின்படி 2017ம் ஆண்டில் 971, 2018ம் ஆண்டில் 1,629, 2019ம் ஆண்டில் 3,168 முறையும் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. சீனாவை எப்போதும் ஆதரிக்க விரும்பும் பாகிஸ்தான், காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க விரும்புகிறது என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.