இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக அசான் இக்பால் உள்ளார். இவர் இன்று கஞ்ச்ரூர் என்ற இடத்தில் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அசான் இக்பாலை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் இக்பாலின் வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.
வலியால் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.