குஜராத்,
க்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் தாக்கியதை நம்ப மறுத்த டில்லி முதல்வர் படத்தை பயங்கரவாகிள் படத்தினுடே வைத்து பேனர் வைத்துள்ளனர் குஜராத் பாரதிய ஜனதா கட்சியினர்.
அதில் ’பாகிஸ்தான் ஹீரோக்கள்’ என்று எழுதப்பட்டு  பயங்கரவாதிகள்  புர்கான் வானி, ஹபீஸ் சயீத் மற்றும் ஒசாமா பின்லேடன் படத்துடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படமும் வைக்கப்பட்டு உள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் நாளை மறுதினம் ஆம் ஆத்மி கட்சியின் பேரணி நடைபெற உள்ளது. பேரணியில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்ள உள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
தற்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நகரில் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. ’பாகிஸ்தான் ஹீரோக்கள்’ என்ற தலைப்பிலான பேனரில் பயங்கரவாதிகள் புர்கான் வானி, ஹபீஸ் சயீத் மற்றும் ஒசாமா பின்லேடன் படத்துடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.
இதுபோன்ற பேனர்கள் விவகாரங்களில் எங்களை செயல்பட விடாமல் பாரதீய ஜனதா கட்சியினர் தடுக்கின்றனர் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டிஉள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை ஆம் ஆத்மி கட்சியின் நீக்கினர். பேனர்கள் தொடர்பாக தகவல் அறிந்ததும் ஆம் ஆத்மி தலைவர்கள் அப்பகுதிக்கு சென்றனர், பேனர்களை நீக்கினர்.
kejriwal-2
இதுதொடர்பாக சூரத் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் யோகேஷ் ஜாத்வானி பேசுகையில், “இந்த பேனர்கள் அனைத்தும் பாரதீய ஜனதா தொண்டர்களால் வைக்கப்பட்டு உள்ளது, அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டம் நடைபெறுவதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் இதுபோன்ற 8 பேனர்களை நீக்கி உள்ளோம். கெஜ்ரிவால் கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துக் கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
இவ்விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா தலைவர் நிதின் பாஜியாவாலா பேசுகையில்,
கெஜ்ரிவாலின் சூரத் வருகைக்கு பாரதீய ஜனதா தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டு உள்ளோம். பாரதீய ஜனதா தொண்டர்கள் இதனை செய்திருக்க மாட்டார்கள் என்று நான் உறுதி அளிக்கின்றேன்.
சில நாட்களுக்கு முன்னர் கெஜ்ரிவால் புகைப்படம் கருப்பாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அவர்கள் பாரதீய ஜனதாவினர் இதனை செய்தனர் என்று குற்றம் சாட்டினர். ஆனால், பின்னர் தெரியவந்தது ஆம் ஆத்மி தொண்டர் அஜித் திவாரிதான் அதனை செய்தது என்று. அவர்கள் பொதுமக்களின் கவனத்தை இழுக்க இதுபோன்று செய்கிறார்கள்,
பின்னர் எங்கள் மீது அவதூறு பரப்ப முயற்சி செய்கிறார்கள். பேனர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு எந்தஒரு சம்பந்தமும் கிடையாது என்று கூறினார்.