லாகூர்:
பாகிஸ்தான் சிறையில் உள்ள குல் பூசன் ஜாதவை சந்திக்க அவரது மனைவிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
உளவு பார்த்ததாக இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை கடந்த 2016ம் ஆண்டு பலுசிஸ்தானில் பாகிஸ்தான் கைது செய்தது. அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.
இந்த வகாரத்தை இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை தொடர்ந்து மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குல்பூசன் ஜாதவை சந்திக்க அவரது மனைவிக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் வெளியான தகவலில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
‘‘குல்பூசன் ஜாதவை சந்திக்க அவரது மனைவிக்கு மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சந்திப்புக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்து வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.