நங்காதத், குஜராத்
குஜராத் எல்லைப்புற சிற்றூரில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநில எல்லைப்பகுதியான கட்ச் மாவட்டம் அடாசா தாலுகாவில் நங்காதத் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது.
இந்த சிற்றூர் பாகிஸ்தானுக்கு எல்லையில் அமைண்டுள்ளது.
இன்று காலை சுமார் 6 மணிக்கு திடீரென பெரிய சத்தம் கேட்டதால் அந்த ஊர் வாசிகள் கலக்கம் அடைந்தனர்.
அவர்கள் விரைந்து சென்று பார்த்த போது பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள்தை கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக இத்தகைய விமானங்கள் கண்காணிப்புக்கு பயன்படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.