ஸ்ரீநகர்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது/.

பஹல்காம் தாக்குதல்லுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.  பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

நேற்று மாலை இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதையொட்டி, பாகிஸ்தானுடனான போர் நேற்று மாலை 5 மணி முதல் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆயினும், போர் நிறுத்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம்,

”இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ராணுவ செயல்பாடுகளை நிறுத்த இருநாடுகளின் ராணுவ டைரக்டர் ஜெனரல் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் கடந்த சில மணிநேரங்களில் பாகிஸ்தானால் மீறப்பட்டது. எல்லையில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. எல்லையில் அத்துமீறல்களுக்கு பாகிஸ்தாந்தான் பொறுப்பு’

என்று தெரிவித்துள்ளார்.