இஸ்லாமாபாத்:

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ஹபீஸ் சயீத்துக்கு மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட  3 வழக்குகளையும் சேர்த்து  11 ஆண்டுகள்  சிறை தண்டனை விதித்து  பாக்கிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சயீத்  மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு பாகிஸ்தான் நாட்டின்  நீதிமன்றம், 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினர். இதில்,  6  அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு   சயீத் தலைமையிலான ஜமாத்-உத்-தவா தீவிரவாத அமைப்பு காரணம் என அறியப்பட்டது.

இது மட்டுமின்றி ஹபீஸ் சயீத்  மீது பல்வேறும் பல்வேறு பயங்கரவாத வழக்குள் இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மும்பை தாக்குதல் சூத்திரதாரியான ஹபீஸ் சயீத்துக்கு, மும்பை குண்டுவெடிப்பு மற்றும்,  பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு பயங்கரவாத நிதி வழக்குகளில் பயங்கரவாத நிதி வழக்குகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மும்பை வழக்கில்  சயீத்துக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்ற இரு வழக்குகளிலும் சேர்த்து மொத்தம் 11 ஆண்டுகள் சிறை தண்டனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்  ஒவ்வொரு வழக்கிலும் ரூ .15 ஆயிரம் அபராதம் விதித்தது.