ஞ்சகுலா

டந்த 2007 ஆம் வருடம் சம்ஜாதா ரெயில் வெடிகுண்டு வைத்தவர்களை அடையாளம் காட்ட பாகிஸ்தான் தம்பதியர் தயாராக உள்ளனர்.

கடந்த 2007 ஆம் வருடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜாதா ரெயிலில் வெடிகுண்டு வெடித்ததில் 68 பயணிகள் கொல்லப்பட்டனர்.   இந்த வழக்கை ரெயில்வே காவல்துறை விசாரித்து வந்தனர்.  அதன் பிறகு அரியானா மாநில காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர்.   இந்த வழக்கை மத்திய உள்துறை அமைச்சகம் 2010 ஆம் வருடம் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றியது.

கடந்த 2007 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நடந்த இந்த வெடிகுண்டு விபத்தை நிகழ்த்தியதாக முன்னாள் ஆர் எஸ் எஸ் உறுப்பினர் அசீமாநந்த் மற்றும் 7 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.   பானிபட் அருகே நடந்த இந்த வெடிகுண்டு விபத்தை ஒட்டி அடுத்தடுத்த பெட்டிகளில் தீ பிடித்ததால் 68 பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த ரெயிலில் பாகிஸ்தானை சேர்ந்த ராணா சவுகத் அலி மற்றும் அவர் மனைவி ருக்சானா ஆகியோர் தங்கள் ஐந்து குழந்தைகளுடன் பயணம் செய்தனர்.   அப்போது இந்த தம்பதிகள் அருகே இருவர் வந்து அமர்ந்துள்ளனர்.   தங்களுக்கு இளம் வயது மகள்கள் உள்ளதால் அவர்களை வேறு இடத்தில் அமருமாறு சவுகத் கூறி உள்ளார்.   அதை ஒட்டி அவர்கள் தங்கள் பெட்டியை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற சில நிமிடங்களில் அந்த பெட்டி வெடித்துள்ளது.   அந்த விபத்தில் சவுகத் அலி தம்பதியினரின் ஐந்து குழந்தைகளும் நெருப்பில் கருகி இறந்துள்ளனர்.   அத்துடன் அவர்களை காப்பாற்ற சென்ற சவுகத் அலி மற்றும் ருக்சானா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.   அவர்கள் இருவரும் குற்றவாளிகளை அடையாளம் காட்ட தயாராக உள்ளனர்.   ஆனால் அவர்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானிய அரசுகள் உதவவில்லை என அவர்கள் வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்த மாதம் 11 ஆம், தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக இருந்த நிலையில் இந்த தகவல் கிடைத்ததால் அசீமாநந்தாவின் வழக்கறிஞர் தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு கேட்டுள்ளார்.   நீதிமன்றத்துக்கு மற்றொரு பாகிஸ்தான் பெண்ணும் விபத்தில் இறந்த தனது தந்தை சந்தேகத்துக்குரியவர்கள் நடமாட்டம் உள்ளதாக மொபைலில் கூறியதாக கடிதம் எழுதி உள்ளார்.

அதை ஒட்டி வழக்கு நடந்து வரும் அரியானா மாநில பஞ்சகுலா நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.  மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் இந்த மாதம் 18 ஆம் தேதி அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.