பாகிஸ்தான்: ரூ.17 லட்சத்தில் தங்க ஷூ அணிந்த மணமகன்

லாகூர்:

பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான சல்மான் சாகித் என்பவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்க ஷூ அணிந்து கலந்துகொண்டார்.

மேலும், 63 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கிறிஸ்டல் மற்றும் தங்க டை அணிந்திருந்தார். வழக்கமாக மணமகளின் ஆடைகள் தான் ஆடம்பரமாக இருக்கும். ஆனால் இந்த திருமணத்தில் மணமகன் தங்க அலங்காரத்தில் ஜொலித்துள்ளார்.

ஷூ, ஆடை, கிறிஸ்டல், டை என அனைத்தின் மதிப்பும் ரூ. 25 லட்சமாகும். இது குறித்து சல்மான் சாதிக் கூறுகையில், ‘‘நான் எப்போதும் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட ஷூ அணிய விரும்பினேன். வழக்கமாக மக்கள் எப்போதும் தங்கத்தை கிரீடமாக நினைத்து தலையில் அணிவார்கள். ஆனால் தங்கம் என்பது காலுக்கு அடியில் உள்ள அழுக்கு போன்றது என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு செய்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Pakistan: business man wear Rs. 17 lakhs worth golden shoe for his marriage, பாகிஸ்தான்: ரூ.17 லட்சத்தில் தங்க ஷூ அணிந்த மணமகன்
-=-