ஸ்லாமாபாத்

ந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடத்த தயார் என பாகிஸ்தான் நேரடி மிரட்டலை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் ஊடுருவ அடிக்கடி முயன்று வருகின்றனர்.    அதை இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர்.   இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தானினின் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக கூறி இருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத் தமைச்சர் கவஜா ஆசிஃப் தனது டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.   அதில், “மிகவும் பொறுப்பாற்ற முறையில் அவரது பதவிக்கு ஏற்புடையது இல்லாத வகையில் இந்திய ராணுவ தளபதி பேசி உள்ளார்.    அவர் அணு ஆயுத போருக்கு அழைப்பு விடுவது போல உள்ளது.   இந்தியாவின் ஆசை அதுதான் என்றால்  எங்கள் பலத்தை அவர்கள் சோதித்து பார்க்கலாம்.   நாங்கள் எவ்வளவு பலசாலிகள் என்பதை விரைவில் காட்டுவோம்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல பாகிஸ்தான் வெளீயுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தனது டிவிட்டர் பக்கத்தில்,”இந்திய ராணுவ தளபதியின் மிரட்டலான ஒரு பொறுப்பில்லாத பேச்சு அவர்களின் கெட்ட எண்ணத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.   இதை சாதாரண  கருத்தாக ஏற்க முடியாத பாகிஸ்தான் விரைவில் தனது திறனை காட்டும்.   எங்களை தவறாக மதிப்பிட வேண்டும்.   நாங்கள் எங்களைக் காத்துக்கு கொள்ள முழுத்திறனுடன் இருக்கிறோம்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் இந்த பதிவுகள் உலக நாடுகள் இடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.