இஸ்லாமாபாத்: இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) என பயங்கரவாத அமைப்பினருடன் நடைபெற்ற மோதலின்போது, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான மேஜர் மோயிஸ் அப்பாஸ் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடியாக செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது. இதில், ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
2019-ல் பிப்ரவரியில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு ‘பந்தர்’ என்று பெயர் வைக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இது நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தி முகாமை அழித்தது.
பாகிஸ்தான் ஜெட் விமானங்களுடனான ஒரு சண்டையில் அவரது மிக்-21 பைசன் ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர், பிப்ரவரி 27, 2019 அன்று பாகிஸ்தான் இராணுவத்தால் அவர் சிறைபிடிக்கப்பட்டார். அவரது ஜெட் தாக்கப்படுவதற்கு முன்பு, அவர் ஒரு பாகிஸ்தானிய F-16 போர் விமானத்தை வீழ்த்தினார். அன்று, அவர் பாகிஸ்தானின் போர் விமானங்களை எதிர்கொள்ளும் போது, எல்லை கட்டுப்பாட்டு கோட்டை (LoC) தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து விட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். மார்ச் 1, 2019 அன்று, பாகிஸ்தான் அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது, அபிநந்தனின் துணிச்சலான செயலுக்காக அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி எஸ்எஸ்ஜி மேயர் மொயிஸ் அப்பாஸ், அல்கொந்தா ஆதரவு பயங்கரவாத அமைப்பான பாகிஸ்தான் தாலிபான் என்றும் அழைக்கப்படும் தெஹ்ரிக்-இ தாலிபான் அமைப்பைச் சேர்ந்த (TTP, முன்னர் வேறுபட்ட போராளிக் குழுக்களின் கூட்டணியாகும்), பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையின்போது, சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.