ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர்.
மேலும் அவர்களை கைது செய்யத் தேவையான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

‘பயங்கரவாதிகள் இல்லாத ஜம்மு காஷ்மீர்’ என்று கூறும் சுவரொட்டிகளை காவல்துறையினர் ஒட்டியுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பஹல்காமில் இருந்து ஆறு கி.மீ தொலைவில் உள்ள பைசரன் புல்வெளியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகளை நோக்கி தீவிரவாதிகள் சுட்டதில் 26 பேர் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கி, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்த இந்தியா உடன் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து சண்டை கைவிடப்பட்டது.
இந்த நிலையில், தலைமறைவான பஹல்காம் தாக்குதல் தொடர்பான பயங்கரவாதிகளை தேடும் பணி மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.