டில்லி:

ர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும்,  இத்துவாக்களின் மிரட்டல் காரணமாக திரையிடப்படாமல் இருந்த பத்மாவதி படத்துக்கு தணிக்கை வாரியம் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து வரும் 26-ம் தேதி பத்மாவதி திரைப்படம்  வெளியிட இருப்பதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

சித்தூர் ராணி பத்மினியின் கதையினை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக படமாக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தினை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் இயக்க, நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். இப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே தலையையோ அல்லது படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். இதனையடுத்து டிசம்பர் 1ந்தேதி வெளியாவதாக இருந்த படத்தின் வெளியீடு தேதியை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது.

அதையடுத்து கடந்த மாதம் தணிக்கை வாரியம் படத்தை மீண்டும் தணிக்கை செய்து அதற்கு யுஏ சான்றிதழும்,   பத்மாவதி படத்தின் தலைப்பை பத்மாவத் என பெயரை  மாற்றும்படியும் தயாரிப்பாளருக்கு அறிவுரை கூறி இருந்தது.

இதையடுத்து வரும் 26ந்தேதி படம் மீண்டும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தாலும், பத்மாவதி படத்துக்கு பாஜக மாநில அரசுகளான ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் போன்ற ஒரு சில மாநிலங்கள் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என  கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.