டில்லி:
சர்ச்சைக்குறிய பத்மாவதி படத்தை வெளியிட 5 மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற இந்திப் படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். சித்தூர் ராணி பத்மினியின் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ராஜபுத்திர அரசியை அவமதிப்பதாக உள்ளதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு வந்துள்ளது.
ராஜ்புத் கர்ணி சேனா என்ற அமைப்பு படத்தை வெளியிடக்கூடாது என்று மிரட்டல் விடுத்து வருகிறது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர்களை மிரட்டி வருகிறது.
இதன் காரணமாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்பட காங்கிரஸ் ஆளும் பஞ்சாபிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த படத்துக்கு மேற்குவங்க முதல்வர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.