டில்லி

த்மாவத் படத்தை திரையிடாத மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் அரியானா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பத்மாவத் திரைப்படத்துக்கு மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்கள் தடை விதித்திருந்தன.     தடையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தடையை ரத்து செய்தது.  அதையொட்டி இந்த மாநிலங்களில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால் வட இந்தியா எங்கும் பத்மாவத் திரைப்படத்தை எதிர்த்து கார்னி சேனா உள்ளிட்ட பல ராஜபுத்திர அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.   கடும் வன்முறை வெடித்தது     போராட்டம் கட்டுக் கடங்காமல் போனதால்  குஜராத் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை படத்தை திரையிடப் போவதில்லை என அறிவித்தனர்.

போராட்டக்காரர்களை அடக்க காவல்துறையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் அனைத்து திரையரங்குகளிலும் பல முக்கிய நகரங்களிலும் குவிக்கப் பட்டுள்ளனர்.     அமைதி குலைவதால் இந்தப் படம் திரையிடுவதை அனுமதிக்கக் கூடாது என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.    அதை ஏற்றுக் கொண்ட குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க உள்ளன

இந்நிலையில் இந்த படத்தை தடை செய்யக் கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    அதனால் இந்த 4 மாநிலங்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது      உச்ச நீதிமன்றம் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுவை விசாரிக்க தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.