வாரங்கல்:

த்மாவத் திரைப்படத்தை இஸ்லாமியர்கள் பார்க்க வேண்டாம்  என மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பியுமான  அசாதுடின் ஒவைஸி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசும்போது ஓவைசி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

ராஜபுத்திர வம்சத்தினரை இழிவு படுத்துவதாககூறி வட மாநிலங்களில் பத்மாவத் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, படத்தைமீண்டும் மறு தணிக்கை செய்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு படம் வெளி யிட தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டும் படத்தை வெளியிடவும், அதற்கு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய, ஓவைசி, சர்ச்சைக்குரிய இந்தி படமான பத்மாவத்தை ‘பக்வாஸ்’ (வீணாக) என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த படத்தில்  ராஜபுத்திர ராணியான த்மாவதி மற்றும் பேரரசர் அலவுதீன் கில்ஜி ஆகியோரை சுற்றியுள்ள பணம் புணையப்பட்டுள்ளது. எனவே இஸ்லாமியர்கள்  படத்தைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த படத்தை பார்க்க உங்களை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், பத்மாவத் படத்துக்கு எதிராக, ராஜ்புத்ர சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து முஸ்லிம்கள் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும்,   முத்தலாக் சட்டத்திருத்தத்துக்காக மத்திய அரசு  முஸ்லிம்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.