பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
முழுக்க காதலை மையப்படுத்திய கதையைத்தான் இது என கூறப்படுகிறது.
பா.இரஞ்சித் இயக்கிய முதல் படமான ‘அட்டகத்தி’ முழுக்க காதலை மையப்படுத்தி, புனித பிம்பத்தைத் தகர்த்து நையாண்டி பாணியில் எடுக்கப்பட்டது. அடுத்ததாக தீவிரமான கதைக் களங்களையே இயக்கி வந்தார். தற்போது மீண்டும் காதலை மையப்படுத்திய படத்தை பா.இரஞ்சித் இயக்கவிருப்பது நினைவுகூரத்தக்கது.