சென்னை

ன்று தனது 82 ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவ்வரிசையில், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து

“காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களின் அனுபவமும், திறமையான தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.

சமூகநீதிக்கான உங்களின் அர்ப்பணிப்பும், ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்கான முயற்சிகளும் நம் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் முன்னோக்கிய பயணம் தொடர்ந்து வெற்றியடையட்டும்.”

என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பதிவில்

“காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்”

என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.