டெல்லி

றைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை ஒரு தவறு என்பதை  ஏற்றுக் கொண்டதாக  ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1975 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசரநிலயை அறிவித்தார். அதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்   எனவே இதை எதிர்க்கட்சிகள். இந்தியாவின் கருப்பு நாள் எனக் குறிப்பிட்டனர்.

சமீபத்தில் ஜூலை 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்

பேட்டியில் ப சிதம்பரம்,

“பா.ஜ.க. ஏன் இன்னும் பின்னோக்கி 18-வது அல்லது 17-வது நூற்றாண்டு காலத்திற்கு செல்லவில்லை? தற்போது வாழும் சுமார் 75 சதவீத இந்தியர்கள் 1975-க்கு பிறகு பிறந்தவர்கள்தான்.

அவசரநிலை ஒரு தவறு என்பத இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். இனி யாரும் எளிதில் அவசரநிலையை அறிவிக்க முடியாதபடி அரசியலமைப்பை நாம் மாற்றியிருக்கிறோம்.

அவசரநிலை ல் ஏற்பட்ட நன்மை, தீமைகள் குறித்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு விவாதிப்பதால் என்ன பயன் இருக்கிறது? பாஜக கடந்த காலத்தை மறக்க வேண்டும். கடந்த காலத்தில் இருந்து நாம் பல பாடங்களை கற்றுக்கொண்டோம்.”

என்று தெரிவித்துள்ளார்.