டில்லி

ற்போது முடங்கி உள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசின் திட்டம் என்ன என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் பொருளாதார ஆர்வலர் ஆவார்.  அவர் முந்தைய காங்கிரஸ் அரசில் நிதி அமைச்சராக பணி புரிந்துள்ளார்.   அப்போது ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு விதிகளை மீறி வெளிநாட்டு முதலீடு பெற சலுகை அளித்ததாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்தியப் பொருளாதாரம் மிகவும் முடங்கி உள்ளதாகப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.   அதற்கு ஏற்றாற்போல் வெளி நாட்டு முதலீடுகள் குறைவதாலும் விற்பனைச் சரிவாலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.   இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர்.  இதற்கு உலக பொருளாதார ஆர்வலர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனது டிவிட்டரில், “நான் இந்திய பொருளாதாரத்தின்மீது மிகுந்த கவனம் கொண்டுள்ளேன். தற்போதுள்ள பொருளாதரச் சரிவால் முதலீடுகள் குறைந்து அதனால் வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் வர்த்தகம் குறைந்துள்ளது.  இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன?” என அவர் பதிந்துள்ளார்.