திருவனந்தபுரம்:
முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும், இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று தெரிவித்த கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் காவல் துறை, முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்திய முஸ்லிம் லீக் தலைவர்பி.கே. பெரோஸ், கேரள காவல்துறை தலைவரிடம் அளித்துள்ள புகாரில், மத கலவரத்தை தூண்டும்பி.சி.ஜார்ஜை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களும் ஜார்ஜின் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel