“OXFORD DICTIONARY’’ எனும் தரம் வாய்ந்த ஆங்கில அகராதி, இதற்கு முந்தைய பதிப்பில் பெண்கள் என்ற (WOMEN) ஆங்கில வார்த்தைக்கு ஆபாசமான பொருள் தொணிக்கும் விதமாக சில வார்த்தைகளை குறிப்பிட்டிருந்தது.

பெண் என்பவள், ஆண்களை ஈர்ப்பவள், இள நங்கை, துண்டு பொருள், விலைமாது, கவர்ச்சிகரமானவள், வலிமையற்றவள் என்றெல்லாம் பொருள் சொல்லி இருந்தது, ஆக்ஸ்போர்டு அகராதி.

இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மரியா என்ற பெண், ஆக்ஸ்போர்டு பதிப்பகத்துக்கு 34 ஆயிரம் பெண்கள் கையெழுத்துக்களை பெற்று ஆன்லைனில் புகார் மனு அனுப்பினார்.

“பெண்களுக்கு ஆபாச அர்த்தம் கொடுத்துள்ளதை மாற்ற வேண்டும்” என மரியா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதனை ஏற்று ஆக்ஸ்போர்டு அகராதி, பெண்களுக்கு நாகரீகமான பொருளை கொடுத்துள்ளது.

பெண் என்பவர் ஒரு ஆணின் மனைவி, தோழி, ஒரு ஆணின் காதலி என அர்த்தம் அளித்து புதிய பதிப்பில் மாற்றம் செய்துள்ளது.

“இது எங்களுக்கு 85 சதவீத வெற்றி. இன்னும் மாற்றங்களை எதிர் பார்க்கிறோம்” என மரியா தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி